நான் என்னுடைய கார்ப்பரேட் கம்பனியில் வேலைக்கு சேர்வதற்க்கு முன் என் நண்பர்கள்
சொல்வார்கள், தங்கள் கம்பனியில் காஃபி மற்றும் இதர பானங்கள் இலவசமாக கிடைக்கும். அதாவது 24/7 எப்போ வேண்டுமானாலும் டீ கிடைக்கும் என்று. டீ,காஃபி ப்ரியநான எனக்கு இது சந்தோசம் தரும் செய்தியாக இருந்தது.
நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், எனது பழைய அலுவலகத்தில் டீ,காஃபி,பாதம் போன்றவை
இடத்துக்கு வரும். டீ கொண்டுவரும் பையனிடம் சொல்லிவிட்டால் 1 மணி க்கு ஒருதரம்
இடம் தேடி வரும்…அக.அக..
பின்பு வேறு இடம் மறிய பிறகு, நாங்கள் வெண்டிங் மிஷின்ல காஃபி டீ போட்டுக்கணும்,
இது என்னோட திறமைக்கு பெரிய சவால், நான் டீ காஃபி காலேஜ் படிச்ச காலத்தில வீட்டுக்கு லீவ்-ல போகும் போது போட்டாத்தோட சரி, அதுக்குப்பின் இப்போதான்.
சேர்ந்த புதுதில எல்லாமே சரியாதான் இருந்தது… அப்புறம் என் கம்பெனி-ல கொஞ்சம் டெஸ்ட் வைக்க ஆரம்பிச்சாங்க , நமக்கு எப்பவுமே ஒரு அளவுதான்,
ஒரு கப் டீ க்கு 1.5 டீஸ்பூன் ல சர்க்கரை… காஃபி க்கு 2 ஸ்பூன்…
ஆனா சில நாள் கழிச்சு, சர்க்கரை க்கு பதிலா சர்க்கரை கட்டி வைச்சாங்க..
அதுல ரெண்டு கட்டி போட்டா ரொம்ப தித்திக்கும், 1 கட்டினா கசக்கும், அதனால 1 கட்டி + .5 கட்டினு (உடைச்சு) போட்டு குடிச்சேன்…
இப்போ சில மாசமா , அவங்க பாக்கெட் சர்க்கரை கொடுத்தாங்க, அதாவது சர்க்கரை “ஸ்பெஷல்லி பேக்ட் ஃபார் *****” ,
ஆனா அதுலயும் ஒரு சிக்கல். 1 ஃபுல் பாக்கெட் + .5 பாக்கெட் சர்க்கரை எனக்கு போதுமான அளவு இருந்தது ,
ஆனா மிச்சம் .5 பாக்கெட் அப்படியே வேஸ்ட் பண்ண வேண்டியதா இருந்தது …. அதனால கொஞ்சம் கஷ்டமா இருந்தது…
சில பேர் .5 பாக்கெட் அப்படியே வைச்சிக்கிட்டு அப்புறமா யூஸ் பண்ணாங்க…
இப்போ பழையபடி கம்பெனி-ல வெறும் சர்க்கரை வைக்க ஆரம்பிச்சி ட்டாங்க..
அதனால கொஞ்ச நாள் விடுதலை… இந்த கட்டி சர்க்கரை, பாக்கெட் சர்க்கரை ல இருந்து…
ஆமா யார்ப்ப இவங்களுக்கு இந்த ஐடியா எல்லாம் தர்ரது… உக்காந்து யோசிப்பங்களோ…?
google-a blog panna therinja aalungalukku, ithu enna jujubi 🙂