My Dreams

Coming soon to a blogroll near you

மௌன ராகம்…கஷ்டமா சாவு…பனி வயசு July 31, 2007

Filed under: Bioscopu,Movie Reviews — intimateramc @ 9:46 am

இந்த வாரம் கொஞ்சம் அதிகமா படம் பார்த்த உணர்வு , லிஸ்ட் பாருங்க…


மௌன ராகம்
டை ஹார்ட் 4.0
ஐஸ் ஏஜ் 2
ஆட்டோகிராஃப் (ஆனா தப்பிச்சேன் )

எனக்கும் நம்ம TNSTC க்கும் ஒரு விதமான பந்தம், என்னுடைய மற்ற நண்பர்கள் பார்வையில் என்னை விஜய் ரசிகனா மாற்றிய பெருமை TNSTCகே… அதாவது அந்த வாரம் சேலம் போக போறேன்னு எப்படித்தான் கண்டக்டர் க்கு தெரியுமோ? அவர் 5,6 விஜய் பட திருட்டு VCD யோட ரெடி ஆகிடுவாரு, இப்படியே நான் விஜய் நடித்த படத்தை விஜயோட அதிகமா பார்ததுத்தேன்…(அதுவும் அந்த சிவகாசி… முடியல சாமி…)

ஆனா ஒரு சேஂஜ்-க்கு இந்த தடவை ரொம்ப வித்தியாசமா மௌன ராகம்…
அய்யோ.. நிஜமா… ரொம்ப நாள் கழிச்சு பயணத்தின் போது ஒரு நல்ல படம்…

“கைய விடுங்க”
“என், நான் உன்னை தொட்டு தாலி கட்டின புருஷன், கை புடிச்ச தப்பா?”
“நீங்க கைய புடிக்கிறப்போ எனக்கு கரப்பாண்பூச்சி ஊறர மாதிரி இருக்கு…”

ஓஹ்…அந்த இடத்தில் மோகன் நடிப்பு ஜீரணிக்க முடியாத வசனம்,
எந்த புருஷனும் தான் பொண்டாடி வாயில கேட்க விரும்பாத வார்த்தைகள்..
எவ்வளவு கூர்மையான இதயத்தை குத்தி கிளிக்கிற வார்த்தைகள்…

“உனக்கு என்னோட சார்ம்,ரீச்,ஹண்ட்சோமே பார்த்து பயம், எங்கடா இவன லவ் பண்ணிடுவோம்னு பயம்!!”

“ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல..”
“அப்போ ப்ரூவ் பண்ணு”
“எப்படி?”
“என்னோட காஃபி சாப்பிடு”
(அப்புறம் “மிஸ்டர். சந்திரமௌலி” ஹா..ஹா..ஹா..)

அப்புறம் , மறக்கமுடியுமா இசைஞானி இசை… அந்த BGM படத்துல ஒரு கேரக்டர் மாதிரியே இல்ல வந்தது…

(இப்படித்தான் வல்லவன் PVR ல பார்த்துட்டு வரும்போது அடிச்ச கம்மெண்ட் இன்னும் நினைவில் இருக்கு… ஹா.. ஹா… ஹா.., மணி 10:30 PM)
நான்: மௌன ராகத்து அப்புறம் ஒரு நல்ல தமிழ் படம் பார்த்த திருப்தி……
மக்கள் : நற.. நற… நற..

இப்போ டை ஹார்ட் 4.0
தியெட்ரில் செகண்ட் ஷோ! நெடுநாள் கழித்து நண்பர்களுடன்…

நாட்டில் உள்ள எல்லா கம்பியூட்டர் மயமான துறைகளையும் ஹ்யாகர்ஸ்(hackers) (தமிழ் -அ என்னப்பா?) உதவியால் வில்லன் தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர, எப்படியோ இந்த கேஸ்-ல ஆஜர் ஆகுற ஜான் மேக் கிளென்ன் (ப்ரூஸ் வில்லிஸ்) , (when following one of the hackers for a petty case, the villain group tries to kill hacker, then John saves the hacker from villain group then உள்ள பூந்து பட்டைய கிளப்பரார்) .. வில்லனுடைய ஒவ்வொரு முயற்சியையும் தகர்கிறார்… கடைசில அடி உதை வாங்கி ஜெயிக்கிறார்…

ஆங்கில படங்களின் வெற்றியே , அவற்றின் எளிமையான கதையும், அட்டகாசமான
திரைக்கதையும், டெக்நிகல் அசத்தல் ம் தான்… ஸ்டண்ட்-மாஸ்டர் க்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ் … அதுவும் அந்த Tunnel sequence அப்பப்பா.. ( சிவாஜியின் கார் சண்டை காட்சிகளை
இதோடு நினைத்து பார்க்கும் போது ஹா..ஹா.. சிரிப்புத்தன் போங்க ஷங்கர்)…கண்டிப்பா பாக்கலாம்….

(வழக்கம் போல இந்த படம் முடிவிலும் கம்மண்ட், மணி : நள்ளிரவு 12:30 )
நான்: என்னப்பா ஒரு டான்ஸ் இல்ல, சென்ந்ட்டி டைலாக் இல்ல, அட ஒரு கிஸ் கூட இல்ல,
போப்பா, நல்ல இங்கிலீஷ் படம், இதுக்கு போக்கிரி எவ்வளவோ தேவல..
மக்கள் : டேய்… அடங்கு….

ஐஸ்-ஏஜ் 2 …

எவ்வளவு முறை பார்த்தாலும் அழுக்காத படம் ஐஸ்-ஏஜ் 2…
அதுவும் அந்த ஸிட் கதாபாத்திரம் … வடிவேலு எல்லாம் ஓரமா நிக்கவேணும்…
பனி பாறைகள் உருகி வரும் வேளையில் , ஒரு சம வெளியில் வாழும் உயிர்கள், தங்களை காப்பற்றி கொள்ள ரொம்ப தொலைவில் இருக்கும் ஒரு மிக பெரிய கப்பல் வடிவத்தில் உள்ள மர படகுக்குத் தப்பி செல்லும் போது , ஏற்படும் நிகழ்ச்சிகளும், அவைகளுக்குள் ஏற்படும் உரையாடல்களும்-ன் தான் ஐஸ்-ஏஜ் 2…

த ன் வகையினில் தாந்தான் கடைசி என்று நினைத்து கொண்டிருக்கும் காட்டு யானை , தன்னை போல உன்னோரு காட்டு யானையை அதுவும் ஒரு பெண் யானை யை பார்த்த உடன் 😉 , அதனுள் ஏற்படும் மகிழ்ச்சியும், ஆனால் அந்த பெண் யானை தன்னை ஒரு எலி என்று நினைத்து கொண்டு இருப்பதை நினைக்கும்போது ஏற்படும் கடுப்பும் வருத்தமும் , க்ளாஸ்…

அதேபோல் யானையை காலாய்த்து தள்ளும் அந்த எலிகள் ஒண்ணாங் க்ளாஸ் …

அப்பப்போ மழை, அடிக்கடி காஃபி, நொருக்ஸ் முருக்ஸ் … நல்ல மத்தியான உறக்கம் ..இப்டிகா என் வீக் எண்ட் ஆச்சு ..

(ஆகா! ரெண்டு ஆங்கில படத்துக்கு தமிழில் ஒரு கருத்து சொல்லணும்னா எவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கு.. ஆனா லேட் டான கருத்துனு ஒதுக்கிறேன் )

(முழு தமிழில் எழுத முயற்சிகள் தொடரும்… அதனால் பிழைகளை பொருக்க!)

Advertisement
 

நாலு பேர் … July 30, 2007

Filed under: Adagonniya — intimateramc @ 10:33 am

நாலு பேருக்கு தெரிந்தால் என்ன ஆகும்? நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க… ஒரு நல்லது கேட்டததுக்கு நாலு பேர் வேண்டாமா ?நாலு பேர் நல்லா இருக்கணும்னா எது வேணா செய்யலாம்… ..
நாலு பேர் மதிக்கவேண்டும்
நாலு பேர் மதிக்கும்படியான சம்பளம்
நம்மைப் பார்த்து நாலு பேர் நல்லதை கத்துக் கொள்ள வேண்டும் ..

முடியாலப்பா யார் அந்த நாலு பேர் ன்னு சொல்லுங்க …
யாராவது நாலு பேர் இந்த Blog -படிச்சிட்டு சொல்லுங்க

 

அவள்…அவன் July 27, 2007

Filed under: அவள்...அவன் — intimateramc @ 10:32 am

அவள்: ஹே ! பார்த்து ! கழுத்து சுளுக்கிக்கப்போகுது !நான் இருக்கும்போதே அந்தப்
பொண்ணை இப்படி ஸைட் அடிக்கறியே, நான் மட்டும் இல்ல?

அவன்: தப்பா நினைக்காதே ! நான் சும்மா ஒண்ணும் பாக்கால. அந்த பொண்ணு
போட்டுக்கிட்டு இருக்கற தோடு ரொம்ப நல்லா இருந்தது,
அதை நீ போட்டா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி
பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அவள்: தோடா ! போதும், அந்த பொண்ணு காதுகூட சரியா தெரியல ,
அவளோட தலைமுடி அப்படி மறைக்குது, இதுல இவர் தோடு பார்த்தாராம் !!

அவன்: அதும்மா, காத்துல முடி ஆசையும்போது, அந்த தோட பார்த்தேன்,
அதான் கஷ்டப்பட்டுத் திரும்பவும் பார்க்கறேன்.
(ஸ்ஸ்ஸ்ஸ்! யப்பா ! பேசாம லிப்‌ஸ்டிக்-ன்னு சொல்லி இருக்கலாமோ!)

அவள்: நல்லா சமாளிக்கற ! தோடு ன்னு சொன்னியோ பொழைச்ச,
லிப்‌ஸ்டிக் அது இது ன்னு சொல்லி இருந்தே, மவனே! அவ்ளோதான் நீ!

அவன்: ஆங்க்கா! (தப்பிச்சமுடோய் !!!)

அவள்: என்ன?

அவன்: ஒண்ணும் இல்லை கண்மணி !

 

athu…vanthu… July 26, 2007

Filed under: Mobile blog — intimateramc @ 3:13 pm

Niraya ezuthunum than ninaikiren…
ana ezuthum pothu …antha vaarthai than…
karumari…magamayi..
(Look at the label.)

 

சும்மா…சும்மா….

Filed under: Uncategorized — intimateramc @ 8:08 am
தங்கிலிஷ்  பதிலா தமிழில இனிமே blog பண்ணலாமா? அப்பிடின்னு ஒரு முயற்சி
 

Guess What !? July 18, 2007

Filed under: Uncategorized — intimateramc @ 10:48 am
Today one more milestone in my company, they blocked blogger also…. 😦
I am expecting the day , when google is gonna be blocked … 😉
 

RTI … July 17, 2007

Filed under: General — intimateramc @ 7:14 am

RTI …

Anybody used it ? or any clue on it ? please refer

http://pointblank2006.blogspot.com/2007/06/exercise-your-right-to-information.html

http://www.parivartan.com/

 

கோவில்…Kovil … July 16, 2007

Filed under: General — intimateramc @ 12:31 pm

காசு, பணம் வேண்டி கோவிலுக்கு போனால் ,

வாசலில் செருப்பு பார்த்து கொள்ள கேட்கிறார்கள், “டொகன்” காசு….

kaasu, paNam vENdi kOvilukku pOnaal ,
vaasalil seruppu paarththu koLLa kEtkiRaargaL, “tokan” kaasu

Inspired by below one 😉

 

உபயம்…

Filed under: General — intimateramc @ 12:09 pm

சிலை செதுக்கிய சிற்பியின் பெயர் தெரியவில்லை …
ஆனால் சிலைக்கு கீழ் ட்யூப் லைட்டில் பளிச்சிட்டது
“உபயம் : இராமசாமி, பன்னிமடை”

-எங்கேயோ படித்தது

Silai sethukkiya Sirpiyin Peyar theriyavillai ….
Anaal silaikku kIzh tube light-il palichchittathu “ubayam : ramasamy,pannimadai”

Kavithai ubayam : Yaro in www

 

A search engine in Tamil July 13, 2007

Filed under: General — intimateramc @ 6:01 am

…Yeah I know lots more available but this is more convenient … try

http://www.jaffnalibrary.com/tools/google.htm

I need to type raamachchan-thiran to get my name in tamil 😉