My Dreams

Coming soon to a blogroll near you

தேவதையை கண்டேன்….. September 10, 2007

Filed under: அவள்...அவன் — intimateramc @ 8:14 am

அவனும் அவளும் காதல் வலையில் விழுந்து 1 மாதம் ஓடி விட்டது, ஒரு இனிய காலை

அவன்: ஹை! குட் மார்னிங் !
அவள் : GM ! என்னடா ஆச்சரியமா இருக்கு ! உன் டைம்ல விடியங்கார்த்தல எழுந்துட்டே !என்ன விசேஷம்!?
அவன்: ஹ்ம்ம்ம்ம்!!! கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்!
அவள்: அய்யொடா ! நிஜமாவா ? நீயா , எந்த ஃபிகர்-அ பாக்க போனே?
அவன்: அய்யோ! இல்ல நிஜமா பக்தி மயமா, புது ட்ரெஸ் போட்டுட்டு காலைல எண்ணை குளியல் போட்டுண்டு இப்போதான் கோவில்ல இருந்துதான் பேசறேன்!
அவள்: ஹ்ம்ம்ம்! நம்ப முடியவில்லை!!!! புது ட்ரெஸ்-அ? என்னப்பா என்ன மேட்டர்?
அவன்: இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் நாள்! அதான்!
அவள்: ஸ்பெஷல் என்ன ?
அவன்: கெஸ் பண்ணு!
அவள்: ஹ்ம்ம்ம்! புது ட்ரெஸ், கோவில், விடியல்ல போன் , ம்ம் உன்னோட பிறந்த நாள்? இல்லயெ…
அவன்: புவர் கெஸ்! அடுத்தது!
அவள்: ஹ்ம்ம்ம்ம்… அப்பா/அம்மா வோட பிறந்த நாள்… ?
அவன்: ஹ்ம்ம்ம்….. நோ…

அவள்: புது வேலை கிடைச்சது, புதுசா செருப்பு வாங்கி இருக்கே, எதிர்த்த வீட்டில புதுசா பொண்ணுங்க, குடி வந்து இருக்காங்க, உன்னோட அப்ரேஸல்- முடிச்சிட்ட, இன்னிக்கு அந்த கோவில்ல புளியொதரை பிரசாதம்…

அவன்: கடவுளே ! என்னை எந்தன் இந்த மாதிரி கழிசடை கூட சேர வைக்கிறே?

அவள்: ஓகே ஓகே கூல் மா… ஒரு க்ளூ கூடு…
அவன்: க்ளூ வா… சூரியா மற்றும் ஃபிலிப்ஸ் -ஓட மேஜர் ப்ராடக்ட்-ஏ!
அவள்: சூரியா , ஃபிலிப்ஸ் மேஜர் ப்ராடக்ட்-ஏ! ஹ்ம்ம்ம்.. புரியலடா …
அவன்: அதுதான் எனக்கு தெரியுமே … சூரியா,ஃபிலிப்ஸ் -ஓட விளம்பரம் நினைச்சு பாரு…
அவள் : ஈஈயயி…. நான் ட்யூப் லைட்-அ?

அவன்: இல்லாம ! கொஞ்சம் குண்டா மஞ்சளா இருக்கறதால, அதை பத்தி சொன்னேன்!
அவள்: பொய் ய்ய்ய்ய்ய்… நீ என்னை ட்யூப் லைட் அப்டிங்ற !
அவன்: ஹப்பா! அதை கண்டுபிடிக்க இவ்ளோ நேரமா?
அவள்: போடா! உன்கூட டூ! இதுதான் க்ளூ-வா ?
அவன்: இல்ல டி ! நீ அவ்ளோ ப்ரைட்-அ லீனா இருக்கேன்னு சொல்ல வந்தேன் …
அவள்: ஆடிங்! மேட்டர் சொல்லு!

அவன்: இன்றோடு என் தேவதைய பார்த்து 1 மாசம் ஆகுது!
அவள்: ………… ..
அவன்: ஹெலோ! இருக்கியா?!
அவள் : ஹ்ம்ம்ம்….
அவன்: என்ன ஆச்சு?
அவள்: ஒண்ணும் இல்ல ! ஐ லவ் யூ !!!
அவன்: ஹ்ம்ம்ம்ம்!!!! என்னமா ஆச்சு?

அவள்: உனக்கு இதெல்லாம் புரியாது … போட ஃபிலிப்ஸ் ப்ராடக்ட்!!!
அவன்: ?!@#$ : )

Advertisement
 

சிவாஜி-2 August 2, 2007

Filed under: அவள்...அவன் — intimateramc @ 7:51 am

அவள் : என்னடா? பயங்கர யோசனை யா இருக்க ? புஷ் உன்கிட்ட ஏதாவது ஐடியா கேட்டாரா?
அவன்: சும்மா ஓட்டாதம்மா … சிவாஜி-2 க்கு தீவிரமா கதை யோசனை பண்ணிக்கிட்டு
இருக்கேன்…
அவள்: சிவாஜி-2 வா?
அவன்: ஆமா.. என்கிட்டே இருக்கற ஒரு வரி கதையை அப்படியே திரைக்கதை யா

வளர்த்துக்கிட்டு இருக்கேன் …
அவள்: நேத்து கேன் டீ ன்-ல சாப்பிட மசால தோசை-ல கொஞ்சம் உப்பு கம்மியா

இருந்தது இல்ல?
அவன்: இப்போ … சிரி .. ஆனா.. அப்புறம் கேப்ப ஸாரீ…
அவள்: ஓ.. இதுதான் பங்க்ச்சு வசனமா?
அவன்: க்ற்ற்ர்ர்ர்….
அவள்: சரி.. எங்கே உன்னோட ஒன்-லைநர் -அ சொல்லு…
அவன்: ரொம்ப கஷ்டப்பட்டு புடிச்சத்து.. சோ ரகசியமா வச்சிக்கோ…
அவள்: சொல்லுப்பா… தூங்கிட போறேன்..

அவன்: இலவச காலேஜ் ஆரம்பிச்சத்துக்கு அப்புறம், தமிழ்நாட்டுல கல்வியறிவு நல்லா
வளர்ந்ததுடுது… அதுலயெ படிச்ச தலைவர் பையன்… மேல் படிப்புக்காக அமெரிக்கா
போறான்…
அவள்: ….
அவன்: அப்பப்போ… “ஹ்ம்ம்ம்” கொட்டு…
அவள்: ஹ்ம்ம்ம்..
அவன்: இப்போ தலைவர், பையனோட அமெரிக்கா போறார்… அங்கே கொஞ்ச நாள் கழிச்சு …
அவள்: ஹ்ம்ம்ம்…
அவன்: தன்னோட பையன்
அவள்: ஹ்ம்ம்ம்…
அவன்: நம்முடைய
அவள்: ஹ்ம்ம்ம்…
அவன்: கொஞ்சம் சொல்ல விடுரியா?…
அவள்: போடா … ஹ்ம்ம்ம் சொன்னாலும் வேண்டாம் அப்டிங்ற …
அவன்: வேண்டோம் .. அழுதுடுவேன்..
அவள்: ஓகே ஓகே சொல்லு…

அவன்: தன்னோட பையன் நம்முடைய கலாச்சரத்தை மறந்து சீரழியரான்… அதை
தாங்க முடியாத தலைவர் அமெரிக்கால இருக்குற இளசுகலுக்கு ,
இந்திய கலாச்சாரம் பாராம்பரியம் மகிமையே தனக்கே உரிய ஸ்டைலல
புரிய வைக்கிறார்… இதை பொறுக்காத சில ரௌடீ ஸ் கஞ்ச விக்கிறவன்,
VCD விக்கிறவன் எல்லாம் தலைவருக்கு எதிரா இருக்காங்க…
அவள்: இன்ட்ரெஸ்டிங் …
அவன்: ஆமாமா.. இதையெல்லாம் முறியடிச்சு , தலை எப்படி நிக்கிறார்? தான் கதை…
அவள்: சூப்பர்… ஏதாவது பன்சு டைலாக்?
அவன்: பண்றீங்க தான் கூட்டமா வரும்… சிறுத்தை சிங்கிளததான் வரும்…
அவள்: ஹே.. அதான் ஏற்கனவே வந்துடுச்செ.. அதையும் தப்பா சொல்லர.
சிங்கம் சிங்கிளததான் வரும் …
அவன்: ஆனா உண்மையிலே சிறுத்தைத் தான் சிங்குளா வேட்டையாட போகும்…
சிங்கம் கூட்டமாகத்தான் போகும்…
அவள்: அப்ப்டியா? …
அவன்: ஆமாம்…
அவள்: டேய்! கலக்குற … நீ பேச ஷங்கர்-கிட்டே அஸிஸ்ட்டெஂட்-அ சேரலாம்-ல..
அவன்: எல்லாம் ட்ரை பண்ணேன்.. இதுக்கு முன்னாடியே ஒரு ஒன்-லைன் சொன்னேன்..
அவள்: அப்படியா .. என்கிட்டே சொல்லவே இல்ல…
அவன்: அதான் இப்போ சொல்றேன் இல்ல…
அவள்: என்ன கதை..

அவன்: இம்சை அரசன் கதை… ஆனா கரண்ட் ட்ரண்ட்- ல சொன்னேன்…
அவள்: அப்படியா .. யாருட உனக்கு இந்த ஐடியா தாரங்க?
அவன்: யாரும் தரள … ஆனா உதாரணமா இருக்காங்க…
அவள்: யாரு ?
அவன்: வேண்டாம்…
அவள்: அட சும்மா சொல்லு…
அவன்: வேற யாரு உங்க நைனா தான் !!!!..
அவள்: டேய் !!! உன்னை …..

அவன் ஒலிம்பிக் ஓட்டம் ஆரம்பம்பம்….

 

அவள்…அவன் July 27, 2007

Filed under: அவள்...அவன் — intimateramc @ 10:32 am

அவள்: ஹே ! பார்த்து ! கழுத்து சுளுக்கிக்கப்போகுது !நான் இருக்கும்போதே அந்தப்
பொண்ணை இப்படி ஸைட் அடிக்கறியே, நான் மட்டும் இல்ல?

அவன்: தப்பா நினைக்காதே ! நான் சும்மா ஒண்ணும் பாக்கால. அந்த பொண்ணு
போட்டுக்கிட்டு இருக்கற தோடு ரொம்ப நல்லா இருந்தது,
அதை நீ போட்டா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி
பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அவள்: தோடா ! போதும், அந்த பொண்ணு காதுகூட சரியா தெரியல ,
அவளோட தலைமுடி அப்படி மறைக்குது, இதுல இவர் தோடு பார்த்தாராம் !!

அவன்: அதும்மா, காத்துல முடி ஆசையும்போது, அந்த தோட பார்த்தேன்,
அதான் கஷ்டப்பட்டுத் திரும்பவும் பார்க்கறேன்.
(ஸ்ஸ்ஸ்ஸ்! யப்பா ! பேசாம லிப்‌ஸ்டிக்-ன்னு சொல்லி இருக்கலாமோ!)

அவள்: நல்லா சமாளிக்கற ! தோடு ன்னு சொன்னியோ பொழைச்ச,
லிப்‌ஸ்டிக் அது இது ன்னு சொல்லி இருந்தே, மவனே! அவ்ளோதான் நீ!

அவன்: ஆங்க்கா! (தப்பிச்சமுடோய் !!!)

அவள்: என்ன?

அவன்: ஒண்ணும் இல்லை கண்மணி !