“அம்மா, தேவையானது எல்லாம் எடுத்து வச்சிடிங்களா? ஏதாவது லிஸ்ட்ல இருந்து மிஸ் ஆனா சொல்லுங்க ?”
“அப்பா, பந்தல்காரனை குப்பிடாச்சு! மதியம் வந்துடுவான்!
“ஹலோ! சூப்பர்ஸ்டார் லைட் சர்விஸா ? ஒரு ட்யுப்லைட் எரிய மாட்டேன்குது , கொஞ்சம் வந்து பாருங்க! என்ன மழைகாலமா.. அப்படித்தான் இருக்குமா. யோவ்! இது என்ன நெய்விளக்கா மழைல எரியமா இருக்க? வருவியா..”
“சொல்லியாச்சு பா! நாளைக்கு காலைல 8 மணிக்கு வண்டி நம்ப வாசல்ல இருக்கும்!”
“ஹலோ ! மாமாவா , எங்கே பை-பாஸ் ரோடா ? ஓகே … I will be right there in New bus stand within 10 min , Yeah I will arrange a taxi for grandma and grandpa !”
“வாங்க பாட்டி , பிரயாணம் எல்லாம் சௌகரியம்தானே ? தாத்தா ! உன்னோட இசிசேரை துடைச்சி வைச்சி இருக்கேன்!!”
“அம்மா , ஸ்வீட்ஸ் ரொம்பா எடுத்துகாதே! கல்யாண பிசியில் சாப்டாம இருக்காதே! “
“Appa, as u said everybody things are packed in different suitcase and recheck them!”
“மாமா , இதுதான் ப்ரோக்ராம் லிஸ்ட் , நீ கொஞ்சம் co-ordinate பண்ணிக்கோ!”
“அத்தை , சாஸ்திரிகளும் உன்குடத்தான் வராலா ? ஓகே நான் receive பண்ணிக்கிறேன்!”
“வாங்கோ! நாளை காலைல 6:30 எழுந்தா போதுமா? ? 5மணி ! சரி!”
“அம்மா ,யாகம் ஆயுடுத்து,வண்டி வந்துடும், be ready”
“டிரைவரா? ஆமா செகண்ட் கட் , பந்தல் போட்ட வீடு “
“மாமா ! நாங்க அல்மோஸ்ட் வந்தாச்சு ! தாராபுரம் , வந்துட்டோம்! “
“ஹாய்! சகலை , ஹாய் அக்கா , ஹாய் .. ஹிய் …ஹிய் …”
“மச்சி , ரூம் எல்லாம் பக்கவா ஏற்பாடு ஆகியாச்சு .. வர வேண்டியதுதான்
வா(ந)ற வேண்டியதுதான் … 🙂 “
“மாப்பிள்ளை அழைப்புக்கு மழை கண்டிப்பா வரும் போல இருக்கே ?! நீங்க யாராவது இன்விடேஷன் கொடுத்திங்களா ?! “
“நல்ல வேலை , மழை வந்ததால புள்ளையார் கோயில் பின்னாடி சூட் மத்த வேண்டிய வேலை இல்லை , தப்பிச்சேண்டா சாமி “
“காசி யாத்திரைக்கு தானே குடை பிடிக்கணும் , இது என்ன மாப்பிளை அழைப்புக்கே , ?!”
“(மனசுக்குள் ) மவனே மாப்பிளை நினைச்சு ஓவரா பேசின , அவ்ளோதான் , அடக்கி வாசி “
“அம்மா, எங்க போன ? , என்னோட parfume பாட்டில காணோம் , கல்யாணத்து அன்னிக்கு போடலாம்னு புதுசா வாங்கி வைச்சி இருந்தேன் !”
“ஏண்டி ! உங்க சைடு எல்லாம் 60 வயசுக்கு மேலதான் சொந்தகாரங்களை வைச்சுபிங்களா? நான் சினிமால பார்த்த கல்யானுதுல பொண்ண சுத்தி ஒரு 10 -20 பொண்ணுக கேக்க பிக்கேனு சிரிச்சிகிட்டு இருப்பாங்களே , அவங்களுக்கெல்லாம் நீ இன்விடேஷன் கொடுக்கலையா ?”
” அண்ணா ! வீடியோ காரர்!! கொஞ்சம் லைட் ஆப் பன்னுரிங்கள , இவ்ளோ ஹீட் இருந்தா, பொண்ணோட மேக்அப் லேசா கலையுது இல்ல! ஆவ் ! “
“இல்லைமா , இனிமேல கமெண்ட் அடிக்கல ! நான் பாவம் இல்லையா , கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சின்ன பிரீடம் thought தான் “
“பட்டாபி , கொஞ்சம் காபி வேணும் , நாளைக்கு விடியல்ல குளிக்க வெந்நீர் வருமா , இல்ல நீங்க கொண்டு வரேளா ?”
“ஏன்மா, அந்த அம்பி மாமாவோட பொண்ண அது , இன்னுமா கல்யாணம் ஆகல? , நல்ல மூக்கும் முழியுமா இருக்காளே … ஹ்ம்ம் . தோஷமா ?”
“ஆஆ..இந்த பஞ்சகச்சம் கட்டுறதை எவன் கண்டுபிடிச்சனோ ? எங்கே எங்கே எல்லாம் மாட்ட வேண்டி இருக்கு , ஆமா பெல்ட் போட்டுக்கலாமா? “
“என்ன ? சட்டை ,பனியன் போட கூடாதா , இல்ல முகுர்த்தம் மட்டும் கலட்டிகலமா ?, யாராவது impress ஆகிட போறாங்க ! “
“சாஸ்திரிகள்! , கொஞ்சம் நெய் விட்டு அக்னி வளர்துங்கோ , புகையில யார் பக்கத்துல இருக்கன்னு தெரியல்ல! எதோ தேவலோகம் மாதிரி எபெக்ட் இருக்கு ! ஓ ! , இதைத்தான் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயக்க படுதுன்னு சொல்றாங்களோ ?! “
“என்னடா! ரூம் புல்லா ஒரே வாசனையா இருக்கு ! அட பாவிங்களா சரக்கு அடிச்சது தெரிய கூடாதுன்னு என்னோட பாரிஸ் parfume ஏ போட்டிங்களா ?”
“மாமா ! நான் இல்லாதப்போ மாப்பிளை சொம்பு கேட்டார் பல்ப் கேட்டார் எவனாவது வந்திட போறான்! எதுவா இருந்தாலும் என்னக்கு ஒரு கால் பண்ணுங்கோ !”
“கல் இல்லாத அரிசி தானே ஆசிர்வாதம் பண்ண கொடுத்து இருக்கிங்க ? அட்சனை போடும் போது அடி பட்ரபோவுது! “
“தாலி கட்டினது நான் , எதுக்கு உங்க அப்பாக்கு எல்லாம் கை குடுக்கறாங்க!? அம்மே !!”
“ஏங்க , ஏரர அதாங்க (ARR) மாங்கல்யம் மியூசிக் எல்லாம் இல்லையா ?”
“மச்சான் ! போற போக்க பார்த்தா , இந்த கால்ல விழுந்து எழுந்தரிகறதுக்கு பதிலா 30 தடவை தோப்பு காரணம் போட சொல்லி இருக்கலாம் !”
“அம்மணி , இப்பவே கண்ணை கட்டுதே ! தூக்கம் வர மாதிரி இருக்கே! , நைட்வர முழிப்பு இருக்குமா ? சாப்ட பின்னாடி பாக்கலாம் ! ஆயிரம் இரவுகள் …யம்மா ! “
kalyanam naa summava?
sweet la irundhu sandai varai paatha thaan swarasiyamae:)