இந்த வாரம் கொஞ்சம் அதிகமா படம் பார்த்த உணர்வு , லிஸ்ட் பாருங்க…
மௌன ராகம்
டை ஹார்ட் 4.0
ஐஸ் ஏஜ் 2
ஆட்டோகிராஃப் (ஆனா தப்பிச்சேன் )
எனக்கும் நம்ம TNSTC க்கும் ஒரு விதமான பந்தம், என்னுடைய மற்ற நண்பர்கள் பார்வையில் என்னை விஜய் ரசிகனா மாற்றிய பெருமை TNSTCகே… அதாவது அந்த வாரம் சேலம் போக போறேன்னு எப்படித்தான் கண்டக்டர் க்கு தெரியுமோ? அவர் 5,6 விஜய் பட திருட்டு VCD யோட ரெடி ஆகிடுவாரு, இப்படியே நான் விஜய் நடித்த படத்தை விஜயோட அதிகமா பார்ததுத்தேன்…(அதுவும் அந்த சிவகாசி… முடியல சாமி…)
ஆனா ஒரு சேஂஜ்-க்கு இந்த தடவை ரொம்ப வித்தியாசமா மௌன ராகம்…
அய்யோ.. நிஜமா… ரொம்ப நாள் கழிச்சு பயணத்தின் போது ஒரு நல்ல படம்…
“கைய விடுங்க”
“என், நான் உன்னை தொட்டு தாலி கட்டின புருஷன், கை புடிச்ச தப்பா?”
“நீங்க கைய புடிக்கிறப்போ எனக்கு கரப்பாண்பூச்சி ஊறர மாதிரி இருக்கு…”
ஓஹ்…அந்த இடத்தில் மோகன் நடிப்பு ஜீரணிக்க முடியாத வசனம்,
எந்த புருஷனும் தான் பொண்டாடி வாயில கேட்க விரும்பாத வார்த்தைகள்..
எவ்வளவு கூர்மையான இதயத்தை குத்தி கிளிக்கிற வார்த்தைகள்…
“உனக்கு என்னோட சார்ம்,ரீச்,ஹண்ட்சோமே பார்த்து பயம், எங்கடா இவன லவ் பண்ணிடுவோம்னு பயம்!!”
“ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல..”
“அப்போ ப்ரூவ் பண்ணு”
“எப்படி?”
“என்னோட காஃபி சாப்பிடு”
(அப்புறம் “மிஸ்டர். சந்திரமௌலி” ஹா..ஹா..ஹா..)
அப்புறம் , மறக்கமுடியுமா இசைஞானி இசை… அந்த BGM படத்துல ஒரு கேரக்டர் மாதிரியே இல்ல வந்தது…
(இப்படித்தான் வல்லவன் PVR ல பார்த்துட்டு வரும்போது அடிச்ச கம்மெண்ட் இன்னும் நினைவில் இருக்கு… ஹா.. ஹா… ஹா.., மணி 10:30 PM)
நான்: மௌன ராகத்து அப்புறம் ஒரு நல்ல தமிழ் படம் பார்த்த திருப்தி……
மக்கள் : நற.. நற… நற..
இப்போ டை ஹார்ட் 4.0
தியெட்ரில் செகண்ட் ஷோ! நெடுநாள் கழித்து நண்பர்களுடன்…
நாட்டில் உள்ள எல்லா கம்பியூட்டர் மயமான துறைகளையும் ஹ்யாகர்ஸ்(hackers) (தமிழ் -அ என்னப்பா?) உதவியால் வில்லன் தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர, எப்படியோ இந்த கேஸ்-ல ஆஜர் ஆகுற ஜான் மேக் கிளென்ன் (ப்ரூஸ் வில்லிஸ்) , (when following one of the hackers for a petty case, the villain group tries to kill hacker, then John saves the hacker from villain group then உள்ள பூந்து பட்டைய கிளப்பரார்) .. வில்லனுடைய ஒவ்வொரு முயற்சியையும் தகர்கிறார்… கடைசில அடி உதை வாங்கி ஜெயிக்கிறார்…
ஆங்கில படங்களின் வெற்றியே , அவற்றின் எளிமையான கதையும், அட்டகாசமான
திரைக்கதையும், டெக்நிகல் அசத்தல் ம் தான்… ஸ்டண்ட்-மாஸ்டர் க்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ் … அதுவும் அந்த Tunnel sequence அப்பப்பா.. ( சிவாஜியின் கார் சண்டை காட்சிகளை
இதோடு நினைத்து பார்க்கும் போது ஹா..ஹா.. சிரிப்புத்தன் போங்க ஷங்கர்)…கண்டிப்பா பாக்கலாம்….
(வழக்கம் போல இந்த படம் முடிவிலும் கம்மண்ட், மணி : நள்ளிரவு 12:30 )
நான்: என்னப்பா ஒரு டான்ஸ் இல்ல, சென்ந்ட்டி டைலாக் இல்ல, அட ஒரு கிஸ் கூட இல்ல,
போப்பா, நல்ல இங்கிலீஷ் படம், இதுக்கு போக்கிரி எவ்வளவோ தேவல..
மக்கள் : டேய்… அடங்கு….
ஐஸ்-ஏஜ் 2 …
எவ்வளவு முறை பார்த்தாலும் அழுக்காத படம் ஐஸ்-ஏஜ் 2…
அதுவும் அந்த ஸிட் கதாபாத்திரம் … வடிவேலு எல்லாம் ஓரமா நிக்கவேணும்…
பனி பாறைகள் உருகி வரும் வேளையில் , ஒரு சம வெளியில் வாழும் உயிர்கள், தங்களை காப்பற்றி கொள்ள ரொம்ப தொலைவில் இருக்கும் ஒரு மிக பெரிய கப்பல் வடிவத்தில் உள்ள மர படகுக்குத் தப்பி செல்லும் போது , ஏற்படும் நிகழ்ச்சிகளும், அவைகளுக்குள் ஏற்படும் உரையாடல்களும்-ன் தான் ஐஸ்-ஏஜ் 2…
த ன் வகையினில் தாந்தான் கடைசி என்று நினைத்து கொண்டிருக்கும் காட்டு யானை , தன்னை போல உன்னோரு காட்டு யானையை அதுவும் ஒரு பெண் யானை யை பார்த்த உடன் 😉 , அதனுள் ஏற்படும் மகிழ்ச்சியும், ஆனால் அந்த பெண் யானை தன்னை ஒரு எலி என்று நினைத்து கொண்டு இருப்பதை நினைக்கும்போது ஏற்படும் கடுப்பும் வருத்தமும் , க்ளாஸ்…
அதேபோல் யானையை காலாய்த்து தள்ளும் அந்த எலிகள் ஒண்ணாங் க்ளாஸ் …
அப்பப்போ மழை, அடிக்கடி காஃபி, நொருக்ஸ் முருக்ஸ் … நல்ல மத்தியான உறக்கம் ..இப்டிகா என் வீக் எண்ட் ஆச்சு ..
(ஆகா! ரெண்டு ஆங்கில படத்துக்கு தமிழில் ஒரு கருத்து சொல்லணும்னா எவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கு.. ஆனா லேட் டான கருத்துனு ஒதுக்கிறேன் )
(முழு தமிழில் எழுத முயற்சிகள் தொடரும்… அதனால் பிழைகளை பொருக்க!)
aah. finally some good moments post
and a big big thanks for stopping that enna koduma kind of posts 🙂 🙂 (romba kodumaya sollitta…pothumnu solrean)
but title-la velaya kanbichitiye ramc
@Sami,
வாழ்க்கைங்கிறது ஒரு வட்டம் மாதிரி
என்ன கொடுமை போஸ்ட் ஒரு டைம் வந்தா…
அடுத்தது குட் மொமெண்ஸ் பததி வரும் …வரணும், வந்து இருக்கு ..
can font be changed to non-italic ?
adei, nee ner kodumathiri konja naal vaichu irundhiyeda… andha enna koduma post ellathukkum sigaram, nee kadaisiya post panna auto post 🙂
but good that u have changed the track 🙂
@Sami,
Oru (sorry moonu) cinema vimarsanam ezhuthinathukku ippadiya..ok inime ellam malarum magilzhichiyana ninaivugal than…
@Sangeetha, Request accepted …